Goldstars News
பிரதான செய்திகள்

தலைநகர் டெல்லியில் வரும் 29ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..!! - குறைய தொடங்கியதா காற்று மாசு?

news-image

டெல்லி: டெல்லியில் வரும் 29-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின் போது, பெருமளவில் காற்று மாசு கட்டுப்பட்டு இருந்தது.  ஆறுகளில் நீரும் தெளிந்து இருந்தது. கொரோனா பரவல் குறைந்த பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கு பின் காற்று மாசு மெல்ல அதிகரிக்க தொடங்கியது. தீபாவளிக்கு பின்னர் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு மிகவும் மோசமடைந்தது. இதன் காரணமாக மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டது. டெல்லியில் காற்றின் தரம் மோசமாகாமல் தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.

இதனை அடுத்து டெல்லி அரசு கடந்த வாரம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வருகின்ற திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறக்கப்படும் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு ஊழியர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வருகின்ற 27ம் தேதி முதல் எரிவாயு மற்றும் மின்சார வாகனங்கள் மட்டுமே டெல்லிக்குள் நுழைய  அனுமதிக்கப்படும் எனவும் பிற டெல்லிக்குள் நுழைய வரும் 3ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாகவும் மாநில சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.