Goldstars News
பிரதான செய்திகள்

சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் - போராட்டத்தில் விவசாயிகள் பலி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தல்

news-image

புதுடெல்லி: விவசாயிகள் இறப்பு குறித்த விவரங்களை அறிய நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதி உள்ளன. ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்தாண்டு நவம்பர் முதல் விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். ஆனால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், `டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது பற்றிய ஆவணங்கள் அரசிடம் இல்லை,’ என்று தெரிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வேளாண் துறை அமைச்சரின் இந்த பேச்சு விவசாயிகளின் சுயமரியாதையை அவமதிப்பதாகவும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் மனதை புண்படுத்தி இருப்பதாலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். போராட்டத்தில் இறந்த விவசாயிகள் குறித்த விவரங்களை அறிய நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,’ என்று தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா, இடது கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிரோன்மணி அகாலிதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளன.