Goldstars News

மத்திய அரசு - இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40.04 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

news-image

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40.04 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,85,33,085-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் மக்களுக்கு பல கட்டங்களாக போடப்பட்டு வருகின்றது.