Goldstars News

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 87.88% ஆக உயர்வு: பாதிப்பு 74.32 லட்சத்தை தாண்டியது; 65.24 லட்சம் பேர் குணம்.!!!q

news-image

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.12 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 74 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 62,211 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,32,680 ஆக உயர்ந்தது.
* புதிதாக 837 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  1,12,998  ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 70,815 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 65,24,595 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,95,087 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 87.78% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.52% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 10.70% ஆக குறைந்துள்ளது.