Goldstars News

தில்லியில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி கைது

news-image

தில்லியில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி  பாஷிர் அகமதுவை தில்லி சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 

போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகம்மது பங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியான பாஷிர் அகமதுவை, தலைநகர் தில்லியில் தில்லி சிறப்பு பிரிவு போலீஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை சேர்ந்த பாஷிர் அகமது என்ற பயங்கரவாதியை பற்றிய தகவல் அளிப்பவருக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.